கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள பானுார் அருகே முளியாதோடு பகுதியில், கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்தார்.
அதே இடத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக தொழிலாளர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இரு இரும்பு குண்டுகள் கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள், நில உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர், பானுார் போலீசுக்கு அளித்த தகவலையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கிருந்த இரு குண்டுகளை கைப்பற்றி, அவற்றை ஆய்வு செய்ய மணல் நிரப்பிய வாளியில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.