ஆதார் கார்டு பதிவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள் – காலதாமதம் ஏற்பட்டதால் ஊழியர்களுடன் வாக்குவாதம்

0
104

கோவை கலெக்டர்அலுவலகத்தில்இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆதார்கார்டு பதிவுசெய்யதனி பிரிவுஉள்ளது. அரசின் பல்வேறுசலுகைகளை பெறஆதார் எண் அவசியமாக உள்ளது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளும் தற்போது ஆதார் எண் வழங்க வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் ஆதார் கார்டுக்குவிண்ணப்பிக்க கலெக்டர்அலுவலகத்தில் நாள்தோறும் காலை முதலே கூட்டம் காணப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு 70 பேருக்கு மட்டுமே ஆதார் விவரங்கள் பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஆதார்கார்டு பதிவுக்காகநீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றிருந்தனர். அப்போது ஆதார் மையத்தில் உள்ள ஊழியர்கள், பொதுமக்களிடம் இருந்துவிண்ணப்பங்களை பெற்றுவிவரங்களை பதிவுசெய்யகாலதாமதம்செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்துபொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,கோவை கலெக்டர்அலுவலக ஆதார் மையத்தில் 2 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால்ஆதார்கார்டு பதிவுக்குவரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. பலர்பள்ளி குழந்தைகளுடன்காத்திருக்கிறோம். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மறுநாள்வரும்படி கூறுகின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே இங்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகரில் கலெக்டர் அலுவலகம் உள்பட 14 இடங்களில் ஆதார் சேவை மையங்கள் உள்ளன. இதில் கலெக்டர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 பேர் வரை மட்டுமே ஆதார் விவரங்கள்குறித்து பதிவுசெய்ய முடியும். மீதம் உள்ளவர்களை அருகில் உள்ளமையங்களுக்கு செல்லும்படிஅறிவுறுத்துகிறோம் அல்லது மறுநாள்வரும்படி தெரிவிக்கிறோம்என்று கூறினர்.