மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது கற்களை வீசி தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

0
97

மோட்டார் சைக்கிளில்சென்ற வாலிபர்கள் மீது கற்களைவீசி தாக்கி, பணம் பறிக்க முயன்ற இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவைசித்தாதோட்டம்பொன்னர்வீதியை சேர்ந்தகோபால் என்பவரின் மகன் விஜயகுமார் (வயது 21). இவர் தனது சகோதரன் கார்த்திகேயன், நண்பர் பிரவீன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 10மணியளவில்கணபதி சத்திரோட்டிலிருந்து வீட்டிற்குமோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இவர்கள் மீதுசரமாரியாக கற்களைவீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உள்பட 3 பேரும்மோட்டார் சைக்கிளை கீழேபோட்டுவிட்டு காயங்களுடன்தப்பி ஓடினர். ஆனால் விஜயகுமார் மட்டும் அவர்களிடம்சிக்கி கொண்டார்.

இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரைமிரட்டி பணம்கேட்டனர். பணம் கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர்கள்விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த விஜயகுமார் அலறினார்.

இவருடைய அலறல் சத்தம் கேட்டஅப்பகுதிமக்கள் அங்கு குவிந்தனர். இதனால் பயந்து போன அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து படுகாயம் அடைந்த விஜயகுமாரைஅப்பகுதிமக்கள்மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்தபுகாரின் பேரில்சரவணம்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் விஜயகுமாரை தாக்கியது கணபதி பகுதியை சேர்ந்தஜீவரத்னம் என்பவரின் மகன் கரண் (25) மற்றும் பூமிநாதன் என்பவரின் மகன் பிளாக்கி என்ற விஜயகுமார் (25)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைமடக்கி பிடித்து கைதுசெய்தனர். அவர்கள் மீது மிரட்டல் விடுத்தல், வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதன்பின்னர்அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவைமத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். இதில் கரண் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்இருப்பதாக போலீசார்தெரிவித்தனர்.