பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் ; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

0
3

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் 16 யூடியூப் சேனல்களும் முடக்கப

அதன் விபரம் பின்வருமாறு:

* டான் நியூஸ்.

* இர்ஷாத் பட்டி

* சமா டிவி,

* ஆரி நியூஸ்,

* போல் நியூஸ்

* ராப்டர்

* தி பாகிஸ்தான் ரிபிரன்ஸ்

* ஜியோ செய்திகள்

* சமா ஸ்போட்ஸ்

* ஜிஎன்என்

* யூசார் கிரிக்கெட்

* உமர் சீமா எக்ஸ்குளூசிவ்

* அஸ்மா

* முனாப் பரூக்

* சனோ நியூஸ் எச்.டி.,

* ராசி ராமா

இவை அனைத்தும் பாகிஸ்தானை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் நடத்தப்படும் சேனல்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் தவறான கருத்துகளை வெளியிட்டதால் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.