விளைநில பரப்பை அதிகரிக்க மானியம்

0
4

கிணத்துக்கடவு வட்டாரத்தில், விளைநில பரப்பு அளவை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025 — 26 சார்பில், பல்வேறு நாற்றுகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதில், தக்காளி நாற்றுகளுக்கு, 9,600 ரூபாய், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 50 ஏக்கர் வரை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிளகாய், 5 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. 12.5 ஏக்கர் பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொத்த மல்லி மற்றும் பப்பாளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியத்தில், 5 ஏக்கர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திசு வாழைக்கு, 16,800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, 12.5 ஏக்கர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் மட்டுமே, 100 சதவீதம் மானியத்தில் நாற்றுகள் வழங்கப்படும்.

மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு, 80 சதவீதம் முன்னுரிமையும், மற்ற கிராம விவசாயிகளுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற, உழவன் செயலி அல்லது தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.