காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதலில், சுற்றுலா பயணியர் உள்பட, 28 பேர் பலியாகினர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் மதுக்கரை மார்க்கெட் சாலை சந்திப்பில், நேற்று நடந்தது.
மெழுகுவர்த்தி ஏற்றி, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் குறிச்சி பகுதி அ.தி.மு.க., சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அப்பாஸ், பா.ஜ., சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன், அ.ம.மு.க., சுந்தராபுரம் பகுதி செயலாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் மணிமாறன், பரமசிவம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.