பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

0
7

பசுமை தமிழ்நாடு திட்டத்தில், பெரிய புத்தூரில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் பெரிய புத்தூரில் நடந்தது.

விழாவில், கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கத் பல்வந்த் வாஹே மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

நாவல், கொய்யா, மகாகனி, புங்கன், மகிழம் உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 400 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.

கோவை மாவட்ட நீதிபதி (மக்கள் நீதி மன்றம்) நாராயணன், சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி ரமேஷ் ஆகியோர், ‘சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பணிகள் குறித்து தெரிவித்தனர். ஏழை, எளியோருக்கு கட்டணம் இல்லாமல் சட்ட உதவி வழங்கப்படுகிறது,’ என்றனர்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் மரக்கன்றுகளை அதிகமாக நட்டு பராமரித்து பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஊராட்சி செயலர் சிவபாலன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, ரவீந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.