குடிநீரை காய்ச்சி குடியுங்க! சுகாதாரத்துறை அறிவுரை

0
3

காய்ச்சல் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சியபின் குடிக்க வேண்டும், என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வால்பாறையில் கோடை மழை பெய்யும் நிலையில்,காலை, மாலை நேரங்களில் நிலவும் பனிப்பொழிவாலும், பகல் நேரத்தில் நிலவும் வெயில் மற்றும் இரவு நேரத்தில் நிலவும் குளிரும் நிலவுகிறது.

சிதோஷ்ணநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டைவலி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவல் காரணமாக நாள் தோறும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வெளிநோயாளிகளாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் சிதோஷ்ண நிலை மாற்றத்தால், தற்போது காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, தண்ணீரை நன்கு காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். கோடை காலம் என்பதால் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.