இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் வேலை நிறுத்தம்

0
6

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தோடு இணைக்கப்பட்ட, இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, இரு நாட்களுக்கு முன், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள, இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊழியர்களின் நலத்தொகையை உயர்த்த வேண்டும்.

கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பை, உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வரும் 25ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில், நேற்றுமுன்தினம், சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, நேற்று கோவை மண்டல அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக, இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவி தலைவர் முருகேசன், கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சையது இப்ராஹிம், இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஜெயபிரகாஷ் உட்பட, பலர் பங்கேற்றனர். வரும் 25ம் தேதி திட்டமிட்டபடி, அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.