11 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

0
6

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 11 முதல், ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் சோமனுாரில் நடந்தது.

ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன், நேற்று முன்தினம் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தனித்தனியாக பேச்சு நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தத்தை தொடர்வது என, விசைத்தறி கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.

மேலும், சோமனுார் சங்க செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் இரவு துவக்கினர்.