விசைத்தறி கூலி உயர்வு; கலெக்டர் பேச்சுவார்த்தை

0
9

சோமனூர்; கூலி உயர்வு பிரச்னை குறித்து, விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தர கோரி, கடந்த, 19ம் தேதி முதல், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவையில் கலெக்டர் முன்னிலையில் நேற்று மாலை நடந்த கூட்டத்தில், விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்தது.

சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில், 50 முதல், 60 சதவீதம் வரை புதிய கூலி உயர்வு வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோல், திருப்பூரில் நடந்த கூட்டத்திலும் கோரிக்கை விடுத்துள்ளோம். தொடர்ந்து, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் பேசுச்வார்த்தை நடத்தி உள்ளார். திருப்பூர் கலெக்டருடன் பேசிய பின், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார், என்றார்.