கோவை; கோவை நவக்கரையில் உள்ள, ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளிக் கல்வியில் சிறப்பாக பணியாற்றும் பள்ளிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘விஞ்ஞானி லால் மோகன் நினைவு விருதுகள்’ வழங்கப்படுகின்றன
பேராசிரியர் ஆர்.எஸ்.லால்மோகன், மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் முதன்மை விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். சுற்றுச் சூழலையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்த சேவைக்காக, டாக்டர் என்.டி.ஜெயசேகரன் விருது, சிறந்த சமூக சேவகர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது நினைவை போற்றும் வகையில், விஞ்ஞானி லால் மோகன் நினைவு விருதுகள் என்ற பெயரில் சிறந்த பள்ளி, சிறந்த முதல்வர், சிறந்த ஆசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் வரும், 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 6ம் தேதி விருது வழங்கும் விழா நடக்கிறது. விபரங்களுக்கு, www.ajkcas.ac.in என்ற இணையதளத்திலும், 96776 84170 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.