வி.ஜி .எம்., மருத்துவமனை புதிய வசதிகளுடன் விரிவு

0
6

கோவை; கோவை – திருச்சி ரோட்டில் உள்ள, வி.ஜி.எம்., மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டடங்கள், சிகிச்சை பிரிவுகள் நேற்று துவங்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.

வி.ஜி.எம்., மருத்துவமனை நிறுவனர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில், ”புது கட்டடத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத் லேப், ஒரு பிரத்யேக கல்லீரல் அவசர சிகிச்சை பிரிவு, ஒரு டயாலிசிஸ் பிரிவு, கதிரியக்கவியல் சேவை பிரிவு மற்றும் பிரத்யேக உள்நோயாளி அறைகள் ஆகிய வசதிகள் அடங்கும்,” என்றார்.

தமிழக ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, தமிழக மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் வீரராகவராவ், மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில், வி.ஜி.எம்., மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி துறை இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா மற்றும் ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்