தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்; வரும் 22ம் தேதி இளைஞர்களே. .. மிஸ் பண்ணிடாதீங்க

0
5

கோவை; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி, கோவை நவ இந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.

முகாமில், கோவை மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என, அனைத்து விதமான கல்வித் தகுதியுடையவர்களும் முகாமில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.

பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

வேலை நாடும் மனுதாரர்கள் https://forms.gle/FrpzDbZW6y9Jfg7y5 என்ற லிங்கில், தங்களது விபரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். மனுதாரர்கள், தனியார் துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் பற்றி தொடர்ச்சியாக அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு மனுதாரர்கள், 0422-2642388, 94990 55937 ஆகிய எண்களில், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு…

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதன் வாயிலாக மட்டுமே, வேலை வாய்ப்பு முகாமுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு, வேலையளிப்போர் 97901 99681, 99408 05221 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.