சர்வதேச ஷாப்பிங் திருவிழா; கோவையில் இன்று துவங்குகிறது.

0
5

கோவை; சர்வதேச அளவில் ஐ ஏட்ஸ் அண்டு ஈவன்ட்ஸ் சார்பில், ஏழு நாடுகளை சேர்ந்த வணிகர்கள் பங்கேற்கும் ஷாப்பிங் திருவிழா கொடிசியா வர்த்தக அரங்கில் இன்று துவங்குகிறது. வரும், 17 ம் தேதி வரை நடக்கிறது.

இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தாய்லாந்து, துருக்கி, கொரியா, ஆப்கானிஸ்தான், மலேசியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு பொருட்கள் கண்காட்சி அரங்கில் இடம் பெறவுள்ளன.

வீட்டு அலங்கார பொருட்கள், ஆடைகள், நகைகள், கலைநயமிக்க பொருட்கள், அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கி செல்லலாம். தாய்லாந்து பாரம்பரிய, நவீன நகைகள், பட்டு புடவைகள், புத்தர் சிலை, கொரியன் பெண்களுக்கான பல்வேறு பொருட்கள், ஆப்கான் நட்ஸ் மற்றும் பேரிச்சை பழங்கள், துபாய் பர்யூம்ஸ், மலேசியா பர்னிச்சர், லெதர் பொருட்கள் என ஷாப்பர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கிறது.

கொடிசியா அரங்கில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் இரவு,8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக்கட்டணம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.