கோவை, மார்ச் 14: கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறுநீரக பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த ஆண்டு அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் உள்ளதா? என்பதை முன்கூட்டியே கண்டறிந்து சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் என்ற கருப்பொருளில் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் நிர்மலா துவக்கி வைத்தார். இதில், சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் அருள், உதவி பேராசிரியர் டாக்டர் காந்திமோகன், கிருத்திகா, மருத்துவக்கல்லூரி மாணவிகள், நர்சிங் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். புகை, மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் சிறுநீரகத்தை பாதுகாப்பது ெதாடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.