`ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம்

0
6

அன்னூர், மார்ச் 14: கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி தலைமையில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பில் அநீதி அளிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இடிகரை அண்ணா திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மாணவர் அணி துணை செயலாளர் கோகுல், சிறப்பு பேச்சாளர் நெல்லை ஜான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இக்கூட்டத்தின் ஏற்பாடுகளை சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் இடிகரை பேரூர் கழக செயலாளர் ஜெனார்த்தனன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும், இக்கூட்டத்தில் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார், முன்னாள் எம்பி நாகராஜ், கீரணத்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராசு என்ற பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.