குட்கா, போதை மாத்திரை விற்ற நான்கு பேர் மீது ‘குண்டாஸ்’

0
12

கோவை; மாநகர பகுதிகளில் குட்கா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நான்கு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாநகர பகுதிகளில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துடியலூர் பகுதியில் மளிகை கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்த முருகன், 43 மற்றும் புனேவில் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக கடத்தி வந்து கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த சாதிக், 25, முகமது தாரிக், 24, சன்பர் ரகுமான், 23 ஆகிய நான்கு பேர், கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.