தேசிய தலைவர் கைது எஸ் டி பி ஐ கண்டன ஆர்ப்பாட்டம்

0
7

கோவை, மார்ச் 6: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கரும்புக்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்துல் கரீம், மாநில பொருளாளர் முஸ்தபா, மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் மன்சூர், மாவட்ட செயலாளர்கள் உமர் ஷரீஃப் அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலந்து கொண்டவரகள் பைஸி கைதை கண்டித்து கோஷம் எழுப்பினர். அமலாக்கத்துறை அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணியினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.