காரமடையில் திடீர் காட்டுத்தீ

0
9

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே, பெட்டதாபுரம் கோவில் கரடு பகுதியில், நேற்று மாலை 3:00 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.

தகவல் அறிந்த, காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமார் 2 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.

காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், காட்டுத்தீயினால் வனப்பகுதியில் உள்ள புற்கள், இலை சருகுகள் கருகின. தற்போது அப்பகுதியில் மீண்டும் தீ பரவாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்