கோவையில் விபத்து; பைக், லாரி மோதி வாலிபர் பலி

0
9

கோவை, பிப். 27: கோவை, கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (32). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று காலை தனது பைக்கில் ரத்தினபுரி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த லாரியும், வினோத் வந்த பைக்கும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.