கனிமவள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி; கேமரா அமைக்கும் பணிகள் துவக்கம்

0
5

கோவை; கோவை வடக்கு மற்றும் பேரூர் தாலூகா எல்லைக்குட்பட்ட மலை அடி வார கிராமங்களில் செம்மண் கடத்தல் முறைகேடுகளை கண்டறிய, கனிம வளத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்

இரு தாலுகாக்களுக்குட்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் உள்ள செம்மன் கொள்ளை போகும் பகுதிகளில் சோலார் மற்றும் பேட்டரி மின் வசதியுடன் கூடிய கேமரா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் அலுவலகத்திலிருந்து இந்த கேமராக்களை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொண்டு கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் தகவல்களை தொடர்ந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளனர்.

பேரூர், ஆலாந்துறை, செம்மேடு, தொண்டாமுத்தூர், நரசீபுரம், மாங்கரை, சின்ன தடாகம், சோமையனூர், ஆனைகட்டி சோமையம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்படும்.

எந்த வழியாக வாகனங்கள் சென்று கனிம வள கடத்தலில் ஈடுபட்டாலும் அதை கண்டறிய அனைத்து பாதைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கேமரா அமைக்கப்படும் அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு தாலுகாவிலும் தலா, 200 கேமராக்கள் பொருத்தப்படும். தலா, 100 கேமராக்களுக்கு ஒரு சர்வர் பொருத்தப்படும். அதிலிருந்து கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எளிதாக பார்த்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளது.

இவ்வாறு கூறினர்.