சொத்து வரிக்கு அபராதம் காற்றில் பறக்கும் உத்தரவு

0
7

கோவை,:அமைச்சர் அறிவித்த பிறகும், கோவையில் சொத்து வரி செலுத்தியவர்களிடம் 1 சதவீத அபராதம், 6 சதவீத வரி உயர்வு, குப்பை வரி வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில், சொத்து வரிக்கு ட்ரோன் சர்வே, 1 சதவீதம் அபராதம் வசூலிப்பது ஆகிய நடைமுறை உடனே நிறுத்தப்படும் என, இரு தினங்களுக்கு முன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிவித்தார். ஆனாலும், சொத்து வரிக்கு அபராதம் வசூலிப்பது தொடர்கிறது.

மாநகராட்சி பில் கலெக்டர்கள் கூறுகையில், ‘ட்ரோன் சர்வே மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி, வரி வசூலிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எடுத்த ட்ரோன் கணக்கெடுப்பையும், 1 சதவீத அபராதம் விதிப்பதையும் இப்போதைக்கு நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை என, உயரதிகாரிகள் கூறியுள்ளனர். சொத்து வரி செலுத்த வருவோரிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது’ என்றனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ”அபராதம் வசூலிப்பதை நிறுத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறை கேட்டிருக்கிறோம். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுற்றறிக்கையாக அனுப்புவதாகக் கூறியுள்ளனர்,” என்றார்.