கோவை ராம் நகர் பகுதியில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக கவுன்சிலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

0
7

கோவை, பிப். 23: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழக கல்வித்துறைக்கு நிதியை ஒதுக்க முடியாது என தெரிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை ராம் நகர் பகுதியில் மாநகராட்சி 67வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யா தலைமையிலான பெண்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது வீட்டு வாசல்களில் இந்தியை திணிக்காதே, இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என்ற வாசகங்களை எழுதி கோலமிட்டதுடன், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் வார்டு கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.