மகிழ்ச்சி தரும் பட்ஜெட் வரப்போகுது; கோவை கலெக்டர் தகவல்

0
20

கோவை; மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தப்போகும் ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரவிருக்கின்றன என்று, கோவை கலெக்டர் பவன் குமார் கூறினார்

கலெக்டர் கூறியதாவது:

கோவை மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம். இயற்கையை பேணிப்பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நீர் நிலைகளை எக்காரணம் கொண்டும்மாசடையச்செய்யக்கூடாது. நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். மலைப்பகுதி சூழ்ந்திருப்பதால், குளங்கள் நிறைய உள்ளன. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே நிலத்தடிநீர் உருவாவதற்கான நீராதாரங்கள். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். கல்விக்காக சான்றிதழ் பெறுவதில், இழுபறி, காலதாமதம் ஏற்படக்கூடாது. மக்கள் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும்.

குடிநீர், சுகாதாரம், பொதுவினியோகம், சாலை போக்குவரத்து, மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அரசுக்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக உள்ள நாளிதழ்கள், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு, முக்கியத்துவம் தர வேண்டும். கோவை மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தப்போகும், ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரவிருக்கின்றன.அரசின் திட்டங்கள் அனைத்தும், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்.

அதற்கான முயற்சிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கு உறுதுணையாக நாளிதழ்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் பவன்குமார் கூறினார்.