கோவை; ஏபிடி பார்சல் சர்வீஸ், இப்போது ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என, பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் சேவை இந்தியா முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளது.
ஏபிடி லாஜிஸ்டிக்ஸின் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏபிடி நிறுவனம், எட்டு மாநிலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமான லாஜிஸ்டிக்ஸ் வணிகங்களுக்கும், அனைத்து சமூகங்களுக்கும் முறையான சேவை வழங்கும் முன்னணி நிறுவனம் இது.
ஏபிடி பார்சல் சர்வீஸ் என்ற பெயர், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என்று இப்போது மாற்றம் பெற்றுள்ளது. இது இந்த நிறுவனத்தின் மறுமலர்ச்சியாகும். இந்த புதிய பெயர் மாற்றம் மூலம், ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் தனது சேவையை, இந்தியா முழுமைக்கும் விரிவாக்கம் செய்வதோடு, அதிநவீன லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்குவதில், அர்ப்பணிப்போடு செயல்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.