மின்வேலியில் சிக்கி பச்சைக்கிளி உயிரிழப்பு

0
69

கோவை, பிப். 13: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் பயிர்சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மின்வேலிகளை அப்பகுதி மக்கள் அமைத்துள்ளனர். கோவை – ஆனைக்கட்டி சாலையில் உள்ள மாங்கரை பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு முன்பு மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் பச்சைக்கிளி பறந்து வந்து அந்த மின்வேலி மீது அமர்ந்துள்ளது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அந்த பச்சைக்கிளி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த ஒருவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பச்சைக்கிளியின் உடலை கைப்பற்றி, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.