ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.3.68 கோடியில் புனரமைப்பு பணி

0
37

கோவை, பிப். 11: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 48வது வார்டு காந்திபுரம் சத்திரோட்டில் ஆம்னி பஸ் நிலையம், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பஸ் நிலையத்தில் தற்போது ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இதன்பின்னர், அதே பகுதியில் சத்தி ரோட்டில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் குப்பை மாற்று நிலையம் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இதையும் கமிஷனர் நேரில் ஆய்வுசெய்தார். இப்பணியையும் தொய்வின்றி விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, உதவி கமிஷனர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ேஹமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.