கோவை : கோவை, நாக்கியம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் கார்த்திக், ஒண்டிபுதுார், நெசவாளர் காலனி, பட்டணம் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிர் திசையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், கார்த்திக் கையில் இருந்த மொபைலை பறித்து சென்றனர். இது தொடர்பாக கார்த்திக் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, மொபைல் போனை பறித்து சென்றது பள்ளபாளையத்தை சேர்ந்த ஆதித்யன், 19 ஒண்டிபுதுார், நெசவாளர் காலனியை சேர்ந்த சூர்யபிரகாஷ், 19 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.