சொத்து வரிக்கான அபராதத்தை கைவிடுங்க கமிஷனரிடம் ம.தி.மு.க ., வலியுறுத்தல்

0
26

கோவை : கோவையில் சொத்து வரிக்கு அபராதம் விதிப்பது; ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி, மாநகராட்சி கமிஷனரை, ம.தி.மு.க.,வினர் நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.

ம.தி.மு.க., கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில், கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர் மோகன்குமார், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சேதுபதி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் தியாகு, கவுன்சில் குழு தலைவர் சித்ரா, கவுன்சிலர்கள் தர்மராஜ், சித்ரா மற்றும் வெள்ளிங்கிரி உள்ளிட்டோர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று சந்தித்து, கோவையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, மனு கொடுத்தனர்.

அதில், ”ட்ரோன் சர்வே பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை அளவீடு செய்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்திருந்தாலும், நிறுத்தி வைக்க வேண்டும். ஆறு சதவீத வரி உயர்வை நீக்க வேண்டும். இதுவரை செலுத்தியவர்களுக்கான தொகையை, அடுத்த நிதியாண்டுக்கு ஈடுகட்ட வேண்டும். ஒரு சதவீத அபராத வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு முகவரி, வணிக மின் இணைப்பு பட்டியலை வைத்து, வரி விதிப்பு விகிதங்களை மாற்றக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.