கோவை : கோவையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வை 1,636 மாணவர்கள் நேற்று எழுதினர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிராம பகுதியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் பிளஸ்-2 வரை நான்கு ஆண்டுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.
கோவையில் நான்கு மையங்களிலும், பொள்ளாச்சியில் ஒரு மையத்திலும் என மொத்தம் 5 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத, ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 1,847 மணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1,636 மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.