கோவை; ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.74 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
போத்தனுார், பாரதி நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர், 36; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் ‘டாஸ்க்’ஐ செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என இருந்துள்ளது.
கவுரிசங்கர் தனது பெயர், முகவரி, வங்கி விவரங்களை பதிவு செய்து கணக்கை துவங்கினார். ஒவ்வொரு ‘டாஸ்க்’ செய்யவும் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும். டாஸ்க் முடித்தபிறகு லாபத்துடன் பணம் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்தனர். இரண்டு வங்கி கணக்குகளுக்கு 12 தவணைகளில் ரூ. 5.74 லட்சத்தை அனுப்பினார்.
பின்னர், கவுரிசங்கர் தான் முதலீடு செய்த பணம் மற்றும் லாபம் கேட்டபோது, மேலும் ரூ. 84 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அப்போது தான் கவுரிசங்கர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்