கோவை: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா 56வது நினைவுதினம் காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் பி.என்.ராஜேந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி நந்தகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், இணையதள மண்டல அமைப்பாளர் தமயந்தி, துணை செயலாளர்கள் பயனீர் தியாகு, சித்ரா தங்கவேலு, பகுதி செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, அன்பு என்கிற தர்மராஜ், பொ.சு.முருகேசன், எல்.லூயிஸ், கே.பழனிச்சாமி, வெ.சு.சம்பத், குறிச்சி செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.விஜயகுமார், பேங்க் குமாரசாமி, கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, மார்க்கெட் செல்வம், வி.கே.எம்.ஷாஜகான், ப.சதீஷ்குமார், துர்கா காளிமுத்து, காந்தாமணி, ராஜேந்திரன், தங்கவேலு, பிட்டா ரங்கநாதன், கோவை முரளி, ரவிக்குமார், வாசுதேவன், எல்ஜிபி முருகேசன், அருணகிரி, மைக்செட் ராஜன், சின்ன முருகேசன், சண்முகசுந்தரம், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.