வால்பாறை: வால்பாறையில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய, பொதுக்குழுக்கூட்டம் தலைவர் லில்லிஹில்டா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு செயலாளர் தேவகுமாரி, பொருளாளர் பேபி முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சோபியா வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் அமிர்தகுமார், மாநில செயலாளர்கள் ராஜா, சுகன்யா, மாவட்ட தலைவர் முரளி உட்பட பலர் பேசினர். சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப மானிய தொகை வழங்க வேண்டும்.
பண்டிகை காலங்களில் வழங்கப்பட வேண்டிய முன் பணம் குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும். காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு உடனடியாக பணப்பலன் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் இடமாறுதலின் போது, சீனியார்ட்டி அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும் போது, ஒட்டு மொத்த தொகையாக, 5 லட்சம் ரூபாயும், சமையல், உதவியாளர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.