சிறை கைதிகளிடம் நீதிபதி குறை கேட்பு

0
6

கோவை; கோவை திறந்தவெளி சிறை கைதிகளிடம், சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி குறைகள் கேட்டார்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ், ஒண்டிப்புதுார் திறந்த வெளிசிறையில் ஆய்வு மேற்க்கொண்டார். சிறையிலுள்ள தண்டனை கைதிகளிடம் குறைகள் கேட்டு, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கினார். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையல் கூடத்தை பார்வையிட்டார்.

தண்டனை கைதிகள், தங்கள் இல்லத்தினருடன் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, என்பதை கேட்டறிந்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள துணை சிறைக்கு சென்ற நீதிபதி, சிறைவாசிகளை சந்தித்து குறைகள் கேட்டறிந்து, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.