கோவை; பிளஸ்2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் தைத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ்1 விடைத்தாள்கள் தைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதும் நிலையில், விடைத்தாள் தைக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி, கோவையில் கிக்கானி பள்ளியில் விடைத்தாள் தைக்கும் மையம் அமைக்கப்பட்டு, 6.5 லட்சம் விடைத்தாள்கள் தைக்கப்படுகிறது. இதற்கென, 18 தையல் இயந்திரங்களில், டெய்லர்கள் வாயிலாக முதன்மை விடைத்தாளுடன், முகப்பு தாள் இணைத்து தைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தேர்வு சமயத்தில் மொழிப்பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள், நான்கு பக்கங்கள் கொண்ட கூடுதல் விடைத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது, பிளஸ்2 விடைத்தாள் தைக்கும் பணி நிறைவடைந்து
அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் சதீஸ்குமார் கூறியதாவது:
தற்போது, 2.15 லட்சம் பிளஸ்2 விடைத்தாள்கள் தைக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) முதல் பிளஸ்1 விடைத்தாள்கள் தைக்கும் பணி நடக்கிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பிளஸ்1, பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் தைக்கும் பணி நிறைவடையும்.
தினமும், 100 ஆசிரியர்கள் வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர். 38 வருவாய் மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைமையகங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மையங்கள் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கை, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.