ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

0
11

கோவை; கோவையிலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் நிர்வாகிகள், கோவை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு சமர்ப்பித்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்புக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சில:

n கரட்டுமேடு பகுதியிலுள்ள ரத்தினகிரி குமரக்கடவுள் திருக்கோவிலில் கடந்த, 25 ஆண்டுகளாக தற்காலிக பூசாரியாக பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்த் என்பவரை, நிரந்தர பூசாரியாக நியமிக்க வலியுறுத்தி, சரவணம்பட்டி வி.கே.வி.,நஞ்சப்ப கவுண்டர் நகர் மக்கள் மனு கொடுத்தனர்.

n சோமையம்பாளையம் ஊராட்சி மக்கள், அனைத்து கிராமங்களிலும், பெரும்பான்மையான பகுதிவிவசாய விளைநிலங்களும், கால்நடைகளை வளர்க்கும் பகுதிகளாகவே உள்ளன.நுாறு நாள் வேலை திட்டத்தின் வாயிலாக, விவசாயக்கூலிகள் பயனடைந்து வருகின்றனர். அதனால் மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது’ என, மனு கொடுத்தனர்.

n குருடம்பாளையம் ஊராட்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான மக்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மனு அளித்தனர்.

n தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘காட்டுப்பன்றிகளால் விவசாய விளைபொருட்கள் ஏராளமாக சேதமாகின்றன. அவற்றை தடுக்க, தமிழக அரசு காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு சமீபத்தில் வனத்துறைக்கு அனுமதியளித்தது. அதன் அடிப்படையில், காட்டுப்பன்றிகளை சுட்டுவீழ்த்துவதற்கான நடைமுறை உத்தரவை, பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை தவிர, பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தியும், ஏராளமான மனுக்கள் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டன