தொண்டாமுத்தூர்; கோவை மாவட்டத்தில், அரசு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவியிடம், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சந்தானம்,24 என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். கடந்த 14ம் தேதி, மாணவி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பெற்றோர், தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், சந்தானம், தனது சொந்த ஊருக்கு மாணவியை அழைத்துச் சென்றது தெரிந்தது. மாணவியை மீட்ட போலீசார், மாணவியிடம் விசாரணை செய்ததில், சந்தானம், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, கல்லிடைக்குறிச்சிக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
தொண்டாமுத்தூர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சந்தானத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.