‘கத்தியாக ‘ மாறியது சாலை தடுப்பு; காயம்பட்டவர்கள் பயங்கர கடுப்பு

0
7

கோவை, ; கோவை கிருஷ்ணசாமி முதலியார் ரோடு, கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் அருகில், வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு (பேரிகார்டு) உடைந்து, வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது.

தடுப்பில் உள்ள தகடு உடைந்து, வெளியே கத்திபோல் நீட்டிக்கொண்டு இருக்கிறது. இதை கவனிக்காமல் சென்ற வாகன ஓட்டிகள் சிலர், இதனால் காயமடைந்தனர். அவர்கள், ‘விபத்துக்களை தடுக்கத்தான் சாலை தடுப்பு; இப்படி காயம் ஏற்படுத்துவதற்காகவா?’ என, கோபத்துடன் கேட்டனர்.

இரவில் வாகன ஓட்டிகள் கவனிக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த சாலை தடுப்பை, உடனடியாக போக்குவரத்து போலீசார் அகற்ற வேண்டும்.