அ.தி.மு.க. , ஆட்சி; எம்.ஜி.ஆர். , பிறந்த நாளில் மீண்டும் ‘ சபதம்’

0
7

கோவை; எம்.ஜி.ஆரின், 108வது பிறந்த நாளான நேற்று அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தியும், அன்னதானம் வழங்கியும் அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

கோவையில் பொது இடங்களிலும், வீடுகள் முன்பும், அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்று, அவிநாசி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இதய தெய்வம் மாளிகை வளாகத்தில் கட்சி கொடி ஏற்றி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினர்.

‘தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைப்போம்’ என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.