பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் 25ம் தேதி நீச்சல் போட்டி

0
8

கோவை, ஜன. 18: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி கேஎன்ஜி புதூரில் உள்ள லைப் ஸ்ப்ரிங் நீச்சல் பயிற்சி பள்ளியில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 6 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில், பிரீ ஸ்டையில், பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் பட்டர்பிளை ஆகிய நீச்சல் முறைகளில் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கோப்பைகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.