சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்

0
8

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு இந்த சர்வீஸ் ரோட்டில் குறிச்சி குனியமுத்தூர் பகுதிகளுக்குச் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உள்ளது.

இதில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டோரம் இரண்டு இடத்திலும், அண்ணா நகரில் ஒரு இடத்திலும் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வழிந்தோடியபடி உள்ளது.

மேலும், ரோட்டின் ஓரம் உள்ள நடைபாதையில் அதிக அளவு செடி கொடிகள் இருப்பதால், மக்கள் பலர் ரோட்டோரத்தில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதில், போலீஸ் ஸ்டேஷன் அருகே தற்போது குடிநீர் கசியும் இடத்தில் ஏற்கனவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறியது. இதை வடிகால்வாரி அதிகாரிகள் சீரமைப்பு செய்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.