குன்னூர்,ஜன.17: மரம் தூக்கும் தொழிலாளி பணியின்போது உயிரிழந்த சம்பவம் குன்னூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் சோலடாமட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ்(38). மரம் தூக்கும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று கொதங்கனட்டி பகுதிக்கு மரம் தூக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது மரம் தூக்கி செல்லும்போது, அப்போது திடீரென்று மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை குன்னூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அப்பாஸ் இறந்து விட்டதாக கூறினர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்புதான் எதன் காரணமாக உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேத்தி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.