அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 25 ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தேரோட்டம் நடந்தது. மாலையில் குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் வள்ளி கும்மி குழு சார்பில், வள்ளி கும்மியாட்டம் நடந்தது
இதில் ஆறு வயது சிறுமி முதல் 65 வயது மூதாட்டி வரை, கும்மி பாடல்களுக்கு ஏற்ப, நளினமாக கும்மியாட்டம் ஆடி அசத்தினர். 200 பேர் மூன்று மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் ஆடியது, பக்தர்களை பரவசப்பட வைத்தது. நிகழ்ச்சியில், வள்ளி கும்மி ஆசிரியர்கள் செல்வராஜ், வருண், முகேஷ் ஆகியோரை கோவில் நிர்வாகம் கவுரவித்தது. 1,000க்கும் மேற்பட்டோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.