கோவை , பொள்ளாச்சி வழியாக சென்னை-, மதுரைக்கு சிறப்பு ரயில்

0
10

கோவை, : பொங்கல் விழாவையொட்டி, சென்னை – மதுரை இடையே, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3:00 மணிக்கு சென்னையில் புறப்படும் சிறப்பு ரயில் (06067), நாளை காலை 5:00 மணிக்கு, மதுரையை சென்றடையும்.

இந்த ரயில், திருப்பூரை இன்று இரவு 10:20 மணிக்கும், கோவையை, 11:20 மணிக்கும் வந்தடையும். மறுமார்க்கத்தில், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06068), அடுத்த நாள் காலை 9:20 மணிக்கு, சென்னையைச் சென்றடையும்.

இந்த ரயில், கோவையை 12ம் தேதி இரவு 11:30 மணிக்கும், திருப்பூரை, 13ம் தேதி நள்ளிரவு 12:18 மணிக்கும் அடையும்.

திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும்.

இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது