கோவை; ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் சென்னை இந்தியா மேட்டர்ஸ் அமைப்பு இடையே, வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூம், வெளிநாட்டில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் இலவசமாக 40 மணி நேரம் ஐ.இ.எல்.டி.எஸ்., பயிற்சியும், 60 மணி நேரம் ஜி.ஆர்., பயிற்சியும் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டு கல்வி உதவிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை ஆதரவு, செயல்முறை கட்டணத் தள்ளுபடி மற்றும் எஸ்.ஓ.பி., தகுதி திட்டங்கள் போன்றவை வழங்கப்படும்.
விழாவில், ரத்தினம் குழுமத்தின் சி.இ.ஓ., மாணிக்கம், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், குளோபல் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைப்பின் செயலாளர் லட்சுமி நாராயணன், வெளிநாட்டு கல்வி செயலாளர் பிரதீப், எஜூகேஷன் மேட்டர்ஸ் மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.