நிழற்கூரை இல்லாமல் பாதிப்பு: போத்தனுார் தொடர் புறக்கணிப்பு

0
10

கோவை; மழையிலும், வெயிலிலும், தவிக்கும் போத்தனுார் பகுதி மக்களுக்கு, நிழற்கூரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் போத்தனுாரில், மருந்துக்குக்கூட நிழற்கூரை இல்லை. இதனால், பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதியடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், பயணிகள் நிழற்கூரை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், ”கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், எம்.பி., எம்.எல்.ஏ., களின் நிதியில், புதுமையான நிழற் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போத்தனூரில் பிரதான கடைவீதியிலும், ரயில் திருமண மண்டபம் அருகிலும் எந்த ஒரு நிழற் கூரையும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

”இங்கு எத்தனையோ மாமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள், யாரும் இந்த பகுதியை கண்டு கொள்ளவில்லை. போத்தனுார் பகுதி மக்கள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்,” என்றார்.