ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டி; குமரகுரு தொழில் நுட்ப கல்லுாரி வெற்றி

0
11

கோவை; ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்த ஆசிரியர்களுக்கான பூப்பந்து போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், 19வது எஸ்.என்.ரங்கசாமி நாயுடு நினைவு பூப்பந்து போட்டி நடந்தது. ஆசிரியர்களுக்கான இப்போட்டியில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த, 9 அணிகள் பங்கேற்றன.

‘நாக்-அவுட்’ முறையில் நடந்த போட்டியை, கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். காலிறுதியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியை வென்றது.

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி அணி, ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும் வென்றது.

ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது. தொடர்ந்து, முதல் அரையிறுதியில், குமரகுரு கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.

இரண்டாவது அரையிறுதியில், ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி அணி, ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில், குமரகுரு கல்லுாரி அணி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் கோப்பைகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் உடனிருந்தார்.