கோவை; குறிச்சி – வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு சார்பில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வெள்ளலுாரில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, 2019 மார்ச் 31க்கு பின், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியினறி, நாளொன்றுக்கு, 1,200 டன் குப்பையை மாநகராட்சி கொட்டி வருகிறது.
பழம் மற்றும் காய்கறி மார்க்கெட் இங்கு அமைந்தால், இப்பகுதி சுகாதார சீர்கேட்டால் தத்தளிக்கும். அதனால், பஸ் ஸ்டாண்ட்டை மார்க்கெட்டாக மாற்றியமைக்கும் மாநகராட்சியின் திட்டத்துக்கு, மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி தரக்கூடாது.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது