கோவையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

0
11

கோவை, ஜன.7: பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமதுதாஹா. சம்பவத்தன்று இவர் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை பார்க்க தனது பைக்கில் வந்தார். அப்போது தனது பைக்கினை ராமநாதபுரம் பிரியாணி கடை முன்பு நிறுத்திவிட்டு, உணவருந்த சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து முகமதுதாஹா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பைக்கினை தேடி வந்தனர். இந்நிலையில் சுங்கம் சந்திப்பு அருகே போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் வந்த பைக் முகமதுதாஹாவுடையது என தெரிந்தது. மேலும், விசாரணையில் அவர் போத்தனூர் கணேசபுரம் சிவசுப்பிரமணியம் (52) என்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு சிறை சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.